நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு திறந்த தரவு பயன்பாட்டு விதிகள்

பயன்பாட்டு நியதிகள்

இலங்கையின் ICT முகவர் நிலையத்தினால் (ICTA) இயக்கப்படுகிற மற்றும் அனுசரணையளிக்கப்படுகிற இலங்கை அரசாங்கத்தின் இணையத்தள நுழைவு பக்கத்தின் தரவு இணையத்தள பக்கத்தை திறப்பதற்கு உங்களை வரவேற்கிறோம். இந்த இணையத்தளத்தினால் உருவாக்கப்படுகின்ற ஏனைய இணையத்தள ஊட்டல்களுக்கும் இந்த நியதிகள் ஏற்புடையதாகும். இந்த தளத்தைப் பயன்படுத்துவதற்கும் பார்ப்பதற்கும் இந்த நியதிகளை மதிக்க உடன்பட வேண்டும்.

பிரதியாக்கம்

பல்வேறு அரசாங்க தோற்றுவாய்களால் தயாரிக்கப்படுகின்ற தகவல்களை பொதுமக்கள் அணுகுவதற்கு வெளிப்படையான திறந்த கூட்டு மேடையாக ஏனைய அரசாங்க முகவர்களுடன் கூட்டாகச் சேர்ந்து ICTA யினால் இந்த இணையத்தள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தள பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள தகவல்களை ICTA உருவாக்க, முகாமைப்படுத்த, கட்டுப்படுத்த அல்லது பதிப்புத் திருத்த வேண்டிய அவசியமில்லை. பின்வருவனவற்றை புரிந்துக்கொண்டு பல்வேறு அரசாங்க முகவர்கள் மற்றும் ICTA மூலம் தகவல் வழங்கப்படுகிறது:

 • அரசாங்கங்களிடமிருந்தும் சர்வதேச நிறுவனங்களிடமிருந்தும் வரும் பொது தகவல்கள் மனித வர்க்கத்தின் பொது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். ஆகக்கூடியளவில் இந்த தகவல்கள் மனித அறிவு, நலனோம்பல், முன்னேற்றம் என்பவற்றை முன்னேற்றுகிறது;
 • பொது தகவல் என்பது டிஜிட்டல் பொது சொத்தாகும். அத்துடன் அவற்றை அனைவரும் இலவசமாகப் பெறக்கூடியதாக இருக்க வேண்டும்;
 • பொது தகவல்களை வெளியிடுகிற, முகாமைப்படுத்துகிற, பரப்புகிற அமைப்புகளும் அத்தகவல்களை உருவாக்குகிற அல்லது கட்டுப்படுத்துகிற அரச அமைப்புகளும் அவற்றை அணுகுவதற்கு இடமளிக்க வேண்டும். அவ்வாறாயின் ஏனைய தரப்பினருக்கும் எவ்வித கட்டுப்பாடும் இன்றி அவற்றை வெளியிட முடியும்.
 • ஆகவே, பொது தகவல்களைப் பயன்படுத்துவது சம்பந்தமாக விதிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை சிறிய தடைகளுக்குட்பட்டு இந்த இணையத்தள பக்கத்தில் தகவல்களை வெளியிடுகின்ற அரசாங்க முகவர்களும் ICTA வும் இந்த இணையத்தள பக்கத்தில் வெளியிடுகின்ற எந்த தகவலையும் வர்த்தக ரீதியாகவும் வர்த்தக ரீதியல்லாமலும் மறு தயாரிப்பு, மறுபதிப்பு, மறு விநியோகம் என்பவற்றுக்குத் தடைவிதிப்பதில்லை.

எவ்வாறாயினும், தகவல்களைப் பயன்படுத்துகின்ற மூன்றாம்தரப்பு அதன் தோற்றுவாய்களை சரியாகவும் ஒழுங்காகவும் பெற்றுக்கொண்டதை அறிவிக்க வேண்டும். ICTA வுக்கு சேவைகளை வழங்குகின்ற மூன்றாம் தரப்பினால் பதிப்புரிமை பெற்றுள்ள கட்டமைப்பு ரீதியாகவும் வடிவமைப்பு ரீதியாகவும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள எந்த தகவல்கள், தரவு கூறுகள், தரவு கட்டமைப்பு, மென்பொருள் நிகழ்ச்சித்திட்டம் அல்லது ஏனைய சொத்துக்கள் என்பவற்றின் பதிப்புரிமையை மூன்றாம்தரப்பு கொண்டிருப்பதாக தெரிவிக்கின்றபோது பயன்படுத்துனர்கள் புலமைச்சொத்து உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்..

தரவுகளின் விபரக்குறிப்பு

இந்த இணையத்தள பக்கத்தில் அணுகக்கூடிய அனைத்த தரவுகளும் பொதுமக்கள் தரவுகளுக்கு வரையறுக்கப்பட்டுள்ளன. ஆகவே இலங்கையின் அரசியலமைப்பினால் அல்லது ஏனைய சட்டங்களினால் தடை செய்யப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் அரசாங்கத்தினால் வரையறுக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட தகவல்கள் என்பவை இதில் உள்ளடக்கப்படுதலாகாது. இவற்றை வழங்குகிற அமைச்சு/திணைக்களம் பொதுமக்கள் அறிந்துகொள்ளக்கூடிய நடப்பு செய்திகளை அறிவிக்கும்படி வேண்டப்படுகின்றன.

அந்தரங்கத்தன்மை

இந்த இணையத்தள பக்கத்தின் ஊடாக அணுகக்கூடிய அனைத்து தகவல்களும் அரசிலமைப்பினால் அல்லது ஏனைய தகுந்த நியதிச் சட்டங்களினால் வேண்டப்படுகின்ற நடப்பு அந்தரங்கத்தன்மையை இணங்கியொழுக் வேண்டும். This indicates that no information that is relevant to privacy of an individual or organization should not be published through open data and the services provided by utilizing open data.

தரவுகளின் தரமும் தக்கவைப்பும்

இந்த இணையத்தள பக்கத்தின் ஊடாக அணுகப்படகின்ற அனைத்து தகவல்களும் சமர்ப்பிக்கின்ற /மூல முகவர் நிலையத்தினால் தரக்கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தபப்டுகின்றது. இந்த இணையத்தள பக்கத்தின் தரவு தொகுப்புகளின் பதிப்புரு கட்டுப்பாட்டை தகவலின் சமர்ப்பிக்கும் திணைகக்ளத்தின்/முகவர் நிலையத்தின் அதிகார தோற்றுவாய் என்றவகையில் தக்கவைத்திருக்கிறது.

இரண்டாம்நிலை பயன்பாடு

 • பிரதிபண்ணுதல், வெளியிடல், விநியோகித்தல் மற்றும் தகவல்களை ஊடுகடத்தல்;
 • தகவல்களை வேறுபடுத்தி அமைத்தல்;
 • வர்த்தகரீதியாக தகவல்களைப் பயன்படுத்துதல் உதாரணமாக, ஏனைய  தகவல்களுடன் அல்லது தயாரிப்புடன் அல்லது வேண்டுகோளுடன் அதை இணைத்துக்கொள்தல்.

என்பவற்றுக்கு உங்களுக்கு கட்டுப்பாடு இல்லை.

இந்தப் பக்கத்தின் ஊடாக அணுகுகின்ற பக்கத்திற்கு அதன் பயன்பாட்டின் முடிவுபற்றி கட்டுப்பாடு விதிக்கப்ட மாட்டாது விதிக்கவும் கூடாது. எவ்வாறாயினும், தரவு மூலத்தின் அதகாரமுள்ளவர் அல்லது உர்மையாளர் என்றவகையில் சமர்ப்பிக்கும் திணைக்களம் அல்லது முகவர் நிலையம் அணுகப்பட்ட தரவு தொகுப்பின் பதிப்புரு கட்டுப்பாட்டை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். முகவர் தளத்திலிருந்து தரவு தரவிறக்கம் செய்யப்பட்டவுடன், அவர்களின் தரம் காலப்பொருத்தம் தொடர்பில் அரசாங்கம் உறுதியளிக்க முடியாது. மேலும் இணைய பக்கத்திலிருந்து பிரித்தெடுத்த தரவுகளைப் பகுப்பாய்வு செய்வது தொடர்பில் ICTA அல்லது வெளியிடும் அமைப்பு உறுதியளிக்க முடியாது.

மேற்கோள் காட்டும் தரவு

முகவர் நிலையம் ஒவ்வொரு தரவு தொகுப்பும் ஒற்றை மாற்று தரவில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென விரும்புகிறது. பயன்படுத்துனர்களும் தரவுகள் குறிப்பிட்ட இந்த இணையத்தள பக்கத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டன அல்லது பெற்றுக்கொள்ளப்பட்டன என்பதற்கு அந்த திகதியை மேற்கோள் காட்ட வேண்டும். அத்துடன் பயன்படுத்துனர்கள் இந்த இணையத்தள பகக்த்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டதன் பின்னர் தரவு அல்லது பகுப்பாய்வு தொடர்பில் இலங்கை அரசாங்கம் உறுதியளிக்காது என்பதை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். எவ்வாறாயினும் தகவல்களை தெரிவிக்கின்ற உத்தியோகபூர்வ நிலை அல்லது தகவல் அளிக்கின்றவர் உறுதிப்படுத்தகின்ற நிலையை நீங்கள் அல்லது உங்கள் தகவல் பயன்பாடு, தகவல்களைப் பயன்படுத்துவதில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அத்துடன் நீங்கள் மற்றவர்களைத் தவறாக வழிநடத்துவதில்லை எனவும் தகவல்களை அல்லது அவற்றின் தோற்றுவாயை தவறாக வழிநடத்துவதில்லை எனவும் உறுதிப்படுத்த வேண்டும்.

பொதுமக்கள் பங்கேற்பு

இலங்கை அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட திறந்த தரவு மதிப்பீட்டுக்கு அரசாங்கத்தின் திறந்த தரவு முன்னெடுப்புக்கும் வெளிப்படைத்தன்மைக்கும் உதவுவதற்கு தனிப்பட்டவர்களிடமிருந்து பரிந்துரைகளை, தரவுகளை சமர்ப்பிப்பது சம்பந்தமாக குழுக்களுக்கும் அமைப்புகளுக்கும் தரவுவகைகள் மற்றும் ஒற்றைமாற்றுத் தரவுகள் என்பவற்றுக்கும் பங்களிப்புச் செய்யும் இந்த பக்கத்தின் ஊடாக தரவு தொகுப்பொன்றை குறிப்பிடுவதற்கு அல்லது பிரசைகள் கலந்துரையாடல் ஒன்றியத்தின் திறந்த தரவு கலந்தரையாடல் சபையில் கிடைக்கக்கூடியதாக இருக்கும் தரவு தொகுப்புகளின்மீது விமர்சிப்பதற்கு நீங்கள் வேண்டப்படுகிறீர்கள். (http://www.engage.icta.lk/forum/index.php?topic=56.0).

இந்த தரவு கொள்கையயின் ஏற்புடைத்தன்மை

அமைச்சுகளின் அதிகாரசபைகள், திணைக்களங்கள் மற்றும் அரசாங்க முகவர் நிலையங்கள் சட்டத்தின் கீழ் அவர்களுடன் செயலாற்றுவதற்கும் சட்ட அதிகார சபைகள், ஒதுக்கீடுகள், சனாதிபதியின் வழிகாட்டல்கள் என்பவற்றுடன் இணங்கியொழுகுவதற்கு தரவு கொள்கை திருத்தப்பட அல்லது தடைசெய்யப்பட மாட்டாது. ஏனைய சட்டங்களினால் பாதுகாக்கப்படுகின்ற எந்த தரவு கொள்கையையும் இந்த தரவு கொள்கை வரையறுக்காது.

இந்த தரவு கொள்கை அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிற தகவல்களின் உள்ளக முகாமைத்துவத்தை மேம்படுத்துவதை மாத்திரம் கருத்தில் கொண்டுள்ளது. மேலும் அது இலங்கை அரசாங்கத்தினதும் அதன் திணைக்களங்கள், முகவர் நிலையங்கள் அல்லது ஏனைய பிரவேசங்கள் அவற்றின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அல்லது முகவர்கள் ஆகியோரினதும் உரிமைக்கு அல்லது நன்மைக்கு எதிராக உருவாக அல்லது உருவாக்கப்பட மாட்டாது

ஏற்றுக்கொள்ள முடியாத பயன்பாடு

சட்டவிரோதமான, ஆபாசமான, உண்மையைத் திரிபுபடுத்துகிற. அச்சமூட்டுகிற, புலமைச் சொத்து உரிமைகளை மீறுகிற. அந்தரங்கத் தன்மையை அல்லது நோக்கங்களை சேதப்படுத்துகிற எந்த விடயங்களையும் இந்த பக்கத்தில் சேர்ப்பது. ஊடுகடத்துவது அல்லது இதிலிருந்து பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்த நியதிகள் பின்வரும் பயன்பாடுகளை காப்பீடு செய்யாது:

 • தகவலில் தனிப்பட்ட தரவுகள்
 • தகவல் அளிப்பவரின் சம்மதத்துடன் அல்லது அவர்களால் தகவல் அணுகப்படுகிற சட்டத்தின் கீழ் அல்லாமல் தகவல் வெளியிடப்படுதலோ ஆகாது.
 • திணைக்களம் அல்லது அரச துறை அமைப்பு சொல்லாக்கம் மற்றும் தலைப்புகளைத் தவிர்த்து அவை ஓர் ஆவணத்தின் அல்லது தரவு தொகுப்பின் ஒரு பகுதியாக இணைகின்றன.
 • இராணுவ சின்னங்கள்
 • மூன்றாம்தரப்பு வழங்குகின்ற தகவல்கள் உத்தரவுபத்திரம் பெற அதிகாரம் பெற்றதல்ல.
 • ஆக்கவுரிமை, வர்த்தக குறியீடுகள், வடிவமைப்பு உரிமைகள் உட்பட ஏனைய புலமைச்சொத்து உரிமைக்கான தகவல்கள்.
 • தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு போன்ற அடையாள ஆவணங்கள்

மறுப்பு

இணையத்தள பக்கம் தருகின்ற வடிவங்கள் உங்களை ஏனைய இணையத்தள பக்கங்களிலிருந்து தரப்படுகின்ற உள்ளடக்கத்தோடு இணைக்கிறது. நாங்கள் இந்த இணையத்தள பக்கத்தில் முடிந்தளவு நடைமுறைக்கேற்ப பராமரிக்க முயல்கின்றபோது, ஏனைய தளங்களில் உள்ள அல்லது அவற்றிலிருந்து பெறப்படுகின்ற உள்ளடக்கங்களின் சரியான தன்மைக்கு அல்லது நடைமுறை தன்மைக்கு ICTA பொறுப்பேற்காது. ICTA தொடர்புபடுத்துகிற இந்தப் பக்கத்தையும் அல்லது அது தொடர்புபடுத்துகிற ஏனைய இணையத்தள பக்கத்தையும் சேர்த்த விடயங்கள் அல்லது உள்ளடக்கங்கள் தகவல் அல்லது இணையத்தள பக்கம் என்பவற்றைப் பயன்படுத்தவதால் (அலட்சியம் உட்பட) ஏற்படுகிற எத்தகைய சேதங்களை. இழப்புகளை, கோரிக்கைகளைப் பொறுப்பேற்க ICTA மறுக்கிறது.

மூன்றாம்தரப்பு இணையத்தள பக்கத்துடன் தொடர்புபடுத்துகிற இணையத்தளம் அல்லது அதன் உள்ளடக்கம் அல்லது வழங்குபவர் அதை இணங்கியொழுகவோ அல்லது உறுதிப்படுத்தவோ மாட்டாது.

திருத்தம்

நாம் எந்த நேரத்திலும் இந்த நியதிகளைத் திருத்தலாம். இந்த நியதிகளின் முடிவில் அவதானிக்கப்படும் விபரங்களை கவனத்தில்கொண்டு இவை வலுவில் இருக்கக்கூடியவாறு திருத்தப்படும். அவற்றை இந்தப் பக்கத்தில் தெரிவிக்க நடவடிக்கை எடுப்போம்.

இணையத்தள பயன்பாட்டை கூர்ந்து கவனித்தல்

நீங்கள் வாசிப்பதற்கு அல்லது தகவல்களைப் பெறுவதற்கு அல்லது வேலை செய்வதற்கு இந்த இணையத்தள பக்கத்திற்குள் பிரவேசித்தால் அந்த விஜயத்தைப் பற்றிய புள்ளிவிபர தகவல்களை சேகரித்து நாம் களஞ்சியப்படுத்தி வைக்கிறோம். இத்தகவல்களில் சேவைசெய்கிறவரின் முகவரி: உயர்மட்ட அதிகார பெயர், பிரவேசித்த திகதி, நேரம், பிரவேசித்த பக்கங்கள் தரவிறக்கம் செய்யப்பட்ட ஆவணங்கள், முன்னர் பிரவேசித்த தளம், பயன்படுத்திய பிறவுசர் என்பவை உள்ளடங்கியிருக்கும்.

தள புள்ளிவிபரங்கள் எமது இணையத்தளத்தில் எத்தனைமுறை பிரவேசிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ள அனுமதிக்கிறது. அத்துடன் எந்த தகவலுக்கு அதிக ஆர்வம் காட்டப்பட்டுள்ளது முறைமை செயலாற்றுகை அவதானித்தல் என்பவற்றுடன் எமது தளத்துக்குள் பிரவேசிக்கின்றவர்களுக்கு எமது தளத்தை மிகவும் பயன்மிக்கதாக்க எமக்கு உதவுகிறது.

 
Submit to FacebookSubmit to Google BookmarksSubmit to TwitterSubmit to LinkedIn