நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு குடிமக்களை ஈடுபத்தல்

இ.பங்கேற்பு ஊடாக பிரசைகள் ஈடுபடல்


நல்லாட்சியையும் சனநாயகத்தையும் உறுதிப்படுத்துவதற்காக பிரசைகள் பங்கேற்றுக்கொண்ட நீண்ட வரலாறு இலங்கைக்கு உண்டு. அதற்கு சிறந்த உதாரணம்தான் "போக பயிர்ச்செய்கை குழுக் கூட்டமாகும்". இருக்கும் நீர்வளத்தைப் பயன்படுத்தி ஆகக் கூடுதலாக என்ன பயிர்களைப் பயிரிடலாம், தண்ணீர் எவ்வாறு முகாமைப்படுத்தப்பட வேண்டும் என்பது இக்கூட்டத்தில் கலந்துரையாடப்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட வாவியில் உள்ள நீர்வளத்தை வினைத்திறன் மிக்கவகையில் பயன்படுத்துவதற்கு கூட்டாக தீர்மானம் எடுப்பதற்கு அனைத்து விவசாயிகளையும் அரசாங்க அதிகாரிகள் கூட்டுகின்றனர். இந்த பாரம்பரியத்திற்கு ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து செல்கின்ற ஒரு வரலாறு உண்டு.

புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து, பிரசைகள் புதிதாக கலந்துகொள்ளும் வழிவகை ஜனரஞ்சகமாக இருக்கிறது. அரசாங்கத்தின் கொள்கைகளையும் தீர்மானங்களையும் வடிவமைப்பதற்கு பிரசைகளின் பங்கேற்பை உறுதிப்படுத்துவதற்காக இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக அவர்கள் ஈடுபடுகின்ற எண்ணக்கரு இ.பங்கேற்பு என அழைக்கப்படுகின்றது. இந்த தளம் இலங்கையில் இ.பங்கேற்பு ஊடாக பிரசைகள் ஈடுபடுகின்ற நுழைவாயிலாகும்.

அரசாங்கம் ஈடுபடுகிற வழிவகை

அ). உங்கள் முறைப்பாடுகளையம் மனக்குறைகளையும் அரசாங்க தகவல் மையத்துக்கு சமர்ப்பியுங்கள்.

அரசாங்க சேவைகளை அல்லது தமது கடமைகளை செய்யாத உத்தியோகத்தர்களைப்பற்றிய முறைப்பாடுகளை அல்லது மனக்குறைகளை சமர்ப்பிக்க நீங்கள் 1919ஐ அழைக்க முடியும்.

பெறுபேறு: கடந்த இரண்டு வருடங்களில் அ.த.மை. (GIC) அழைப்பு நிலையம் 1170 முறைப்படுகளைப் பெற்றுக்கொண்டுள்ளதோடு அரசாங்க நிறுவனங்களில் நியமிக்கப்பட்ட கவனிப்பாளர்களால் அம்முறைப்பாடுகளில் 35% தீர்க்கப்பட்டுள்ளது.


ஆ) அ.த.மைய இணையத்தளத்திற்கு உங்கள் முறைப்பாடுகளையும் மனக்குறைகளையும் இலத்திரனியல் ரீதியாக சமர்ப்பியுங்கள்.

முறைப்பாடுகளை அல்லது மனக்குறைகளை இலத்திரனியல் ரீதியாக பின்வரும் முகவரிக்கு நீங்கள் சமர்ப்பிக்க முடியும். அரசாங்க தகவல் மைய இணையத்தளத்தின் முறைப்பாட்டு தளம் (http://www.gic.gov.lk/gic/index.php?option=com_complaints&task=defaultcompalin&Itemid=19&lang=en)

பெறுபேறு: அ.த.மை. GIC அழைப்பு நிலையம் 311 முறைப்படுகளைப் பெற்றுக்கொண்டுள்ளதோடு அரசாங்க நிறுவனங்களில் நியமிக்கப்பட்ட கவனிப்பாளர்களால் அம்முறைப்பாடுகளில் 60% தீர்க்கப்பட்டுள்ளது.


இ) நல்லாட்சியை மேம்படுத்தவதற்காக உங்கள் ஆலோசனைகளையம் முன்மொழிவுகளையம் தாருங்கள்

உங்கள் முன்மொழிவை சமர்ப்பிப்பதற்கு இங்கு புதிதாக அறிமுகபப்டுத்தப்பட்ட “பிரசைகள் ஒன்றியத்தைப்” பயன்படுத்த முடியும்.

உங்கள் முன்மொழிவு இருக்கின்ற சேவைக்காக இருப்பின் தயவுசெய்து அ.த.மை (GIC) கருத்துக்கள் தொடர்பைப் பயன்படுத்தவும்.

http://www.gic.gov.lk/gic/index.php?option=com_complaints&Itemid=5Siyabas

  • கிராமிய நுழைவாயில் ஒன்றியம்
    இந்த ஒன்றியம் கிராமிய நுழைவாயில் ஊடாக வழங்கப்படுகின்ற இ.சேவைகள் மீதான பிரச்சினைகள்/ பின்னூட்டல்கள் பற்றி கலந்துரையாடுகின்றது.
  • சியபஸ் ஒன்றியம்
    பல்வகை மேடையில் யுனிகோட் பயன்பாடுபற்றி கலந்துரையாடுவதற்கு இந்த ஒன்றியம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றையம்விட யுனிகொட் சம்பந்தப்பட்ட எழுத்துக்கள், வேண்டுகோள்கள் போன்ற எந்த விடயத்திற்காகவும் திறந்திருக்கிறது.
  • சி.ஐ.ஓ (CIO) ஒன்றியம்
    இலங்கையில் அரசாங்கத்தின் பி.பு.அ (பிரதான புதுமுறையான அலுவலர்களுக்காக இந்த ஒன்றியம் திறந்திருக்கின்றது. இது அவர்களின் பிரச்சினைகள், அனுபவங்கள், நல்ல செயற்பாடுகள் போன்றவற்றை கலந்துரையாடுவதற்கு / பகிர்ந்துகொள்வதற்கு மேடையமைத்துக் கொடுக்கிறது.

ஈ) பேஸ் புக்


பேஸ் புக் பாவனையாளர்களுக்கு தகவல்களை வழங்குவதற்காகவும், ICTA மற்றும் அதன் வேலைத்திட்டங்கள் பற்றிய யோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்கும், பேஸ் புக் பாவனையாளர்களுக்கு ஈடுபடுத்திக்கொள்வதற்காக ICTA பலவிதமான பேஸ் புக் பக்கங்களை பராமரிக்கின்றது.

அரசாங்க நிறுவனங்களுக்கான பேஸ் புக் பக்கங்கள்:

உ) மறு அரசாங்க டுவிட்டர்

இ.அரசாங்க செய்திகளுடன் தொடர்பாட மறு அரசாங்கத்தின் பல்வகையான பங்குதாரர்களுக்கு செய்திகளை அறிவிப்பதற்கு இந்த மைக்ரோ புளொக் பயன்படுத்தப்படுகிறது.


ஊ) அரசாங்க புளொக்; புளொக் ஈடுபாடு


இதுதான் நாட்டின் அரசாங்கத்தின் அமுலாக்கல் விடயங்களைக் கொண்டுள்ள புளொக்காகும். மேலும் இது அரசாங்கத்தின் முன்னெடுப்பு கருத்துக்களையும் விரிவான பங்குதாரர் பின்னூட்டலையும் வசதிப்படுத்துகிறது.


எ) You Tube அலைவரிசை


இந்த You Tube அலைவரிசை ஊடாக இலங்கையில் இ. அரசாங்க காணொளிகளை நீங்கள் பார்க்க முடியும். அத்துடன் உங்கள் விமர்சனங்களைத் தர முடியும்.. https://www.youtube.com/user/ICTASriLanka

 
Submit to FacebookSubmit to Google BookmarksSubmit to TwitterSubmit to LinkedIn