நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு ஈ-சட்டமும் கொள்கையும்

ஈ-சட்டமும் கொள்கையும்


இ.சட்டங்கள்

சட்டரீதியான சூழல் இருத்தல்

eLaws play a major role in use of ICT, as those should provide the necessary legal environment for using electronic data and documents for official as well as personnel purposes and carrying out electronic transactions. Moreover, the activities that are detrimental for the use of eGovernment should be controlled by Computer Crime laws. This page provides information and links related to eLaws which have been adopted in Sri Lanka.

 

இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டம்

அரசாங்கத்திலும் இ.அரசாங்க சேவை ஸ்தாபனங்களிலும் பயன்படுத்துவதற்கான மிகப்பொருத்தமான சட்டமாக 2006ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டம் விளங்குகிறது. பிரதம அமைச்சர், வியாபார வர்த்தக அமைச்சர் மற்றும் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் ஆகியோரின் கூட்டிணைந்த அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டம் வரைவுபடுத்தப்பட்டது. அதன் விளைவாக ICTA வுடன் இணைந்து சட்டவரைஞர் திணைக்களம் இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் மீதான சட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என 2004ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி அமைச்சரவை அமைச்சர்களால் தீர்மானிக்கப்பட்டது. ICTA வின் சட்ட மற்றும் கொள்கை உள்ளீடுகளுடன் சட்டவரைஞர் திணைக்களத்தினால் சட்டம் தயாரிக்கப்பட்டு 2006 மார்ச் 7ஆம் திகதி பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டம்2007 ஒக்ரோபர் மாதம் 1ஆம் திகதிமுதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. (2007 செப்டம்பர் 27ஆம் திகதி வெளியிடப்பட்ட 1516/25ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியைப் பார்க்கவும்).

2006ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டம், ஐக்கிய நாடுகள் ஆணைக்குழுவினால் சர்வதேச வர்த்தக சட்டம் (UNCITRAL) மீது ஸ்தாபிக்கப்பட்டதரங்கள், இலத்திரனியல் வர்த்தகம் (1996) மீதான மாதிரி சட்டம் மற்றும் இலத்திரனியல் கையொப்பங்கள் (2001) மீதான மாதிரி சட்டம் என்பவற்றை அடிப்படையாகக்கொண்டிருக்கிறது.

சட்டத்தின் நோக்கம் வறுமாறு

  • சட்ட தடைகளை நீக்கி சட்ட நிலையானதன்மையை நிலைப்படுத்துவதன்மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தகத்துக்கு வசதிப்படுத்துதல்.
  • இலத்திரனியல் வர்த்தகத்தின் நம்பத்தகுந்த வடிவத்தின் பயன்பாட்டை ஊக்குவித்தல்,
  • அரசாங்கத்துடன் ஆவணங்களை இலத்திரனியலில் கோவைப்படுத்த வசதியளித்தல் மற்றும் நம்பத் தகுந்த வடிவத்தில் இலத்திரனியல் தொடர்பாடல்மூலம் வினைத்திறன்மிக்க அரசாங்க சேவைகளை வழங்க ஊக்குவித்தல் மற்றும்,
  • தரவு செய்திகள், இலத்திரனியல் தொடர்பாடல் என்பற்றில் பொதுமக்களின் நம்பகத்தன்மை, ஒருங்கிணைப்பு, நம்பியிருத்தல் என்பவற்றை ஊக்குவித்தல். சிறந்த தொடர்பாடல் என்றவகையில் இலத்திரனியல் தொடர்பாடல் சட்டபூர்வமாகவும் அதிகாரபூர்வமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை உறுதிசெய்கிறது. (மேம்பாடு சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது)

இந்த சட்டத்தை அடிப்படையாகக்கொண்டு இலத்திரனியல் வடிவத்தில் தகவல்களையும் தரவுகளையும் தக்க வைத்துக்கொள்வதோடு இலத்திரனியல் மூலம் சேவைகளை வழங்குவதற்கு அரசாங்க நிறுவனங்களால் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டத்தை ஏற்றுக்கொள்வது தொடர்பில் தொடர்செயல் என்றவகையில் சர்வதேச உடன்படிக்கையில் (பொதுவாக இ.ஒப்பந்த உடன்படிக்கை என குறிப்பிடப்படுகிறது) இலத்திரனியல் தொடர்பாடலைப் பயன்படுத்துவது சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் உடன்படிக்கையில் கையொப்பமிட்ட ஆசிய பிராந்தியத்தின் முதல் மூன்;று நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.(தெற்காசியாவில் முதல் நாடு). விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தை தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.

சர்வதேச உடன்படிக்கைகள் தொடர்பில் இலத்திரனியல் தொடர்பாடல்கள் பயன்படுத்தப்படுகிறபோது இந்த உடன்படிபக்கை சட்ட நிலையானதன்மையையும் வர்த்தக எதிர்வுகூறலையும் மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்டிருக்கின்றது. அது இலத்திரனியல் சூழலொன்றில் ஒரு தரப்பின் அமைவிட உறுதிப்பாடு, இலத்திரனியல் தொடர்பாடலை அனுப்பும். பெறும் இடம், நேரம், ஒப்பந்த உருவாக்கத்துக்கான தன்னியக்க செய்தி முறைமைகளின் பயன்பாடு, கையால் எழுதப்பட்ட கையொப்பங்களுக்கும் இலத்திரனியல் அதிகார முறைமைகளுக்கும் இடையில் இருப்பவற்றுடன்- 'மூல' எழுத்து ஆவணங்கள் உட்பட – எழுத்து ஆவணங்களுக்கும் இலத்திரனியல் தொடர்பாடலுக்கும் இடையில் செயல்பாட்டு சமநிலை என்பவற்றை உருவாக்குவதற்காக இந்த அளவுகோள் பயன்படுத்தப்பட வேண்டும்.

இன்னுமொரு முக்கியமான தொடர்செயல் என்றவகையில், இலங்கை அரசாங்க நிறுவனங்களுக்கும் பிரசைகளுக்கும் அதிகாரத்தையும் மறுக்கப்படாமையையும் உறுதிப்படுத்துவதற்கு டிஜிட்டல் கையொப்பங்களை வழங்குவதற்காக சான்றுப்படுத்தும் அதிகாரத்தை உருவாக்கும் நடவடிக்கையில் ICTA செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.

கணனி குற்றங்கள்

2007ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க கணனி குற்ற சட்டம், கணனி குற்றங்களை அடையாளம் காண்பதற்கும், அதற்கான புலனாய்வு மற்றும் அத்தகைய குற்றங்களுக்கு சட்ட நடவடிக்கை எடுத்தல் என்பவற்றை வரையறுக்கிறது. சட்டமூலம் பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டு 2005 ஆகஸ்ட் 23ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் பாராளுமன்ற 'பீ' நிலையியற் குழுவால் விரிவாக மீளாய்வு செய்யப்பட்டது. அது 2007 மே மாதம் சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு 2007 யூலை 9ஆம் திகதி பாராளுமன்றத்தின் சபாநாயகரால் சான்றுப்படுத்தப்பட்டது.

2007ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க கணனி குற்ற சட்டத்தின் அடிப்படை, கணனிக்குள், கணனி நிகழ்ச்சிக்குள். தரவுக்குள் அல்லது தகவலுக்குள் அதிகாரமின்றி பிரவேசிக்கும் முயற்சிகளை குற்றமாகக்கருதுவதாகும். அத்காரமற்ற கணனி பயன்பாடுகள். அதாவது குற்றமிழைப்பவர் கணனிக்குள் பிரவேசிப்பதற்கு அதிகாரமுடையவராக இருந்தாலும் அதைப்பொருட்படுத்தாமல் அதகாரமற்ற கணனி பயன்பாடு தொடர்பாக கையாள்வதற்கு ஏற்பாடுகளை இது கொண்டிருக்கிறது.

அதிகாரமற்ற சீராக்கல், தகவல்களை மாற்றுதல் அல்லது அழித்தல், பிரவேசத்தை மறுத்தல் என்பவற்றை சட்டம் குற்றமாக குறிப்பிடுகிறது. அத்துடன் அதிகாரமற்றவர்கள் பிரவேசிப்பதை தடுக்கும்வகையில் கணனி நிகழ்ச்சிதிட்டங்களை எவராவது நபர்கள் அமைப்பதையும் குற்றமாகக் கருதுகிறது. உத்தெச சட்டத்தின் கீழ் ஏனைய குற்றங்களாக, கணனியை சேதப்படுத்துகிற அல்லது கணனிக்கு தீங்கிழைக்கிற வைரசுகள் லொஜிக் குண்டுகள் போன்றவற்றை அறிமுகப்படுத்துதல், தகவல்களை சட்டவிரோதமாகப் பிரதிபண்ணுதல், கணனி சேவைகளை அதிகாரமின்றி பயன்படுத்துதல், கணனி நிகழ்ச்சித்திட்டமொன்றை துண்டித்தல், ஒரு கணனியிலிருந்து இன்னொரு கணனிக்கு தரவுகளை அல்லது தகவல்களை ஊடுகடத்துகின்றபோது குறுக்கீடு செய்தல் என்பவை கருதப்படும்.

குற்றங்களை புலனாய்வு செய்வதற்காக புதிய ஆட்சியொன்றை இந்த சட்டம் அறிமுகப்படுத்துகிறது. கணனி குற்றச் செயல்களைப் புலனாய்வு செய்வதற்காக பொலிஸ் 'நிபுணர்கள்' குழாம் ஒன்றை அமர்த்திக்கொள்வதற்கும் இந்த சட்டத்தில் ஏற்பாடுகள் உண்டு.

தரவுகளைப் பாதுகாத்தல்

அநேகமான கம்பனிகளுக்கு, குறிப்பாக இணையத்தின் மீது தொழிற்படுகிற கம்பனிகளுக்கு தனிப்படட தரவுகள் குறிப்பிடத்தக்க சொத்துகளாக இருக்கின்ற ஒரு தகவல் வயதில் தரவு பாதுகாப்பு விதிகள் முக்கியமான சட்ட ஆட்சியாக வளர்ந்துகொண்டிருக்கின்றன. எவ்வாறாயினும் ஒன்றிணைக்கப்பட்ட உலக பொருளாதாரத்தில், தேசிய தரவு பாதுகாப்பு விதிகளை இலகுவாக ஏமாற்ற முடியும். அத்துடன் நியாயாதிக்கத்துக்கு வெளியே தரவுகள் மாற்றப்படுவதன் காரணமாக பிரசைகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பும் இல்லாமற்போகிறது. அத்தகைய ஏமாற்று வேலைகளை தடுப்பதற்கு எடுத்த முயற்சியாக, இலங்கையைப் போன்ற நுருஇல்லாத நாடுகளுக்கு தனிப்பட்ட தரவுகளைக் கட்டுப்படுத்துகிற ஏற்பாடுகளை நுரு தரவு பாதுகாப்பு ஆட்சிப்பரப்பு கொண்டிருக்கிறது.

தற்பொழுது 2003 ஆம் ஆண்டின் தகவல் தொடர்பாடல் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளின் ஊடாக நியதிச்சட்டத்தின்மீது வைக்கப்பட்டுள்ள ஒரு குறியீட்டுடன் தனியார்துறையையும் சேர்த்து, தரவுப் பாதுகாப்புகுறியீட்டு நடைமுறையை ஏற்றுக்கொண்டு அதனடிப்படையில்  அரசாங்கம் ஒரு கொள்கையைத் தயாரித்துக்கொண்டிருக்கிறது. அதன்படி இந்த அணுகுமுறையை தனிப்பட்ட அல்லது இணைந்த  ஒழுங்குவிதி அணுகுமுறையாக இருக்கிறது.(0103ஆம் பிரிவைப் பார்க்கவும்)


புலமைச்சொத்து உரிமைகள் (IPR)

புலமைச்சொத்து உரிமைகளைப் (IPR) பாதுகாப்பது சம்பந்தமாக 2003ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க புலமைச்சொத்து பாதுகாப்பு சட்டம் 1979ஆம் ஆண்டின் 52ஆம் இலக்க புலமைச்சொத்து குறியீட்டை திருத்தியது. 2003ஆம் ஆண்டின் பு.சொ.சட்டம் மென்பொருள், வர்த்தக இரகசியங்கள், ஒருங்கிணைக்கப்பட்ட பிரிவுகள் என்பவற்றைப்பாதுகாப்பது தொடர்பிலான பல புதிய தோற்றங்களைக் கொண்டிருக்கிறது. (மேலதிக விபரங்களுக்கு இந்த ஆவணத்தின் 0204 மற்றும் 0205 ஆகிய பிரிவுகளைப் பார்க்கவும்)

கீழே இலங்கை அரசாங்கத்தின் இ சட்டங்களுடன் தொடர்புடைய சட்டங்கள் தரப்பட்டுள்ளன

2003ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சட்டம்

2003ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க புலமைச்சொத்து சட்டம் (பதிப்புரிமை தொடர்பான பிரிவுகள்)

2006ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டம்

2007ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க கணனி குற்றங்கள் சட்டம்

2005ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க கொடுப்பனவு, கணக்குத் தீர்த்தல் சட்டம்

2006ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க கொடுப்பனவு விருப்பாவண நன்கொடை மோசடி சட்டம்

ICTA இணையத்தள பக்கத்தின் இ.சட்ட கருத்திட்த்திற்கு விஜயம் செய்க

Mobile Payment Guidelines - 13_mobile_payment_2011_1e

Mobile Payment Guidelines - 14_mobile_payment_2011_2e

Electronic Payments to Government Institutions PF447E

Electronic Payments by Government Institutions 02_2013E

Last Updated on Tuesday, 06 August 2013 03:31
 
கொள்கைகள்

அரசாங்கத்தின் வினைத்திறனையும் செயலாற்றலையும் மேம்படுத்துகிற அதேநேரத்தில் பிரசைகளுக்கு சிறந்த சேவைகளை வழங்குவது இ அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும்.

ஒழுங்கானதும் ஒரேவிதமானதுமான அரசாங்க சேவையை அமுலாக்குவதற்காக 2009ஆம் ஆண்டு அமைச்சரவை அமைச்சர்களால் இ அரசாங்க வழங்கல்  வரையறுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

அமைச்சரவை அமைச்சர்களால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் அனைத்து அரசாங்க நிறுவனங்களும் இ அரசாங்க கொள்கைகளை ஏற்றுக்கொண்டு அமுலாக்கி அதனுடன் இணங்கியொழுக வேண்டும்.

இந்த பக்கம் இ அரசாங்கத்துக்கு அறிமுகம் ஒன்றை, இ அரசாங்க கொள்கையை ஜனாதிபதி செயலாளர் வழங்கியுள்ள சுற்றறிக்கை, தரவிறக்கத்திற்கான அரசாங்கத்தின் கொள்கை என்பவற்றை வழங்குகிறது.

இ அரசாங்கத்துக்கான அறிமுகம்

விரிவான இ அரசாங்க கொள்கை இணக்கம் சரிபார்க்கும் பட்டியல்

இ அரசாங்க கொள்கையின் சுற்றறிக்கை

Condense Information Security policy

Detail Information Security policy

மேலதிக இ அரசாங்க கொள்கை தொடர்பான வளங்களை பெறுவதற்கு, ICTA இணையத்தளத்தின் இ அரசாங்க கொள்கை கருத்திட்ட பக்கத்திற்கு விஜயம்செய்க

Last Updated on Monday, 24 June 2013 07:54
 

 
Submit to FacebookSubmit to Google BookmarksSubmit to TwitterSubmit to LinkedIn