நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு இணையப் பாதுகாப்பு

சைபர் பாதுகாப்பு

அரசாங்கங்கள், வியாபாரங்கள், பிரசைகள் பௌதிக உலகிலிருந்து ("e")"இ" உலகத்துக்கு குடிபெயர்கின்றபோது இலத்திரனியல் அலைவரிசைகள் ஊடாக  அவர்களுடைய தேவைகளை அடைவதற்கும் நோக்கங்களை அடைவதற்கும் சைபர் பாதுகாப்பு அனைத்து பங்குதார தரப்பினர்களுக்கும் மிக முக்கியமான மற்றும் கூட்டுத்தொகுப்பான தலைப்பாக இருக்கிறது.

சைபர் பாதுகாப்பு மின்னஞ்சல், சமூக ஊடகம், இணையத்தளங்கள் மற்றும் இணையத்தள அடிப்படையிலான வேண்டுகோள்கள் என்பவற்றுக்கு மட்டுமல்ல வலைப்பின்னல் பாதுகாப்புக்கும் செயற்பாட்டு முறைமைகளுக்கும்கூட வரையறுக்கப்படவில்லை.

சமூக ஊடக விபரங்கள், இணையத்தளங்கள், இணையத்தள வேண்டுகோள்கள் என்பவற்றை அதிகாரமின்றி பிரவேசித்தல் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளன. இலங்கையும் அத்தகைய நிகழ்வுகளுக்கு முகம்கொடுத்துள்ளது.

எவ்வாறாயினும் சைபர் பாதுகாப்பு என்பது ஒரு விசேடமான பகுதியாகும். அதனால் ICTA இலங்கை கணனி அவசர தயார்நிலை அணி - Sri Lanka Computer Emergency Readiness Team| Coordinating Centre (Sri Lanka CERT|CC) www.slcert.gov.lk என்று அழைக்கப்படுகிற துணை கம்பனியொன்றை இலங்கையில் தகவல் பாதுகாப்பு சேவைகளைப் பெறுவதற்காக அமைத்துள்ளது. இலங்கை Sri Lanka CERT|CC அனைத்துவகையான பங்குதார தரப்புகளுக்கும் ஆலோசனைகளையம் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்குகிறது.

 • பிரசைகளுக்காக
 • மின்னஞ்சல், சமூக ஊடகம் மற்றும் இ. வங்கி அலுவல்கள் போன்ற இணையத்தள வேண்டுகோள்களைப் பயன்படுத்துகின்றவர்கள் தீய எண்ணமும் நிதிசார்ந்த நோக்கங்களையும் கொண்ட மனிதர்களால் ஏமாற்றப்படுகின்றனர், தவறாக வழிநடத்தப்படுகின்றனர். Sri Lanka CERT|CC இணையத்தளத்துக்குள் பிரவேசித்து அவர்களுடைய மின்னஞ்சல் செய்திக் கடிதத்துக்கு சந்தாதாரராகும்படி பிரசைகளுக்கு ஆலோசனை தெரிவிக்கப்டுகின்றது. அது அத்தகைய பொறிக்குள் அகப்படாமல் இருப்பதற்கு பெறுமதியான ஆலோசனைகளை வழங்குகிறது. சிலவேளைகளில் பிரசைகள் அத்தகைய தீய செயல்களுக்குப் பலியானால் Sri Lanka CERT|CC விரைவுச் சேவை இலக்கத்தை 011 2691692 அழைத்து ஆலோசனைகளையும் உதவியையும் பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

 • வியாபார அமைப்புகள்
 • வியாபார அமைப்புகளும் தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்காக Sri Lanka CERT|CC இணையத்தளத்துக்குள் பிரவேசித்து அதன் IS செய்திக் கடித்ததிற்கு சந்தாதாரராகும்படி கேட்டுக்கொள்ளப்டுகின்றன. உங்களுடைய வியாபார நிறுவனம் IS அடிப்படையிலான தீய நடவடிக்கைக்குப் பலியானால் நீங்கள் தொழிலநுட்ப உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு Sri Lanka CERT|CC விரைவுச் சேவையை அழைக்க முடியும். இது நியாயமான கட்டணத்தற்கு வழங்கப்படுகிறது..

 • அரசாங்க நிறுவனங்கள்
  • உங்களுடைய அரசாங்க நிறுவனம் வேண்டுகோள்கள் அடிப்படையிலான இணையத்தளத்தை அல்லது இணையத்தை/நடமாடும் சேவையைக் கொண்டிருந்தால் நீங்கள் உடனே Sri Lanka CERT|CC உடன் தொடர்புகொண்டு தகவல் பாதுகாப்பு (IS)ஆய்வொன்றை நடத்தும்படி கேளுங்கள். குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு ஒருமுறை உங்களுடைய தகவல் தொழில்நுட்ப முறைமையில் IS ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • Sri Lanka CERT|CC 2013-03-20ஆம் திகதி அரசாங்க CIO களுக்காக இணையத்தள பாதுகாப்பு பணிப்பட்டறையை/ செயலமர்வை நடத்தியது. இந்த செயலமர்வு இணையத்தள பாதுகாப்புக்குள்ள அச்சுறுத்தல் மற்றும் அந்த சவால்களுக்கு முகம்கொடுக்க எவ்வாறு தயாராக வேண்டும் என்ற தெளிவான விபரங்களை அளித்தது. அதில் சைபர் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பாக CIO கள் ஊடகத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்பதும் உள்ளடங்கியிருந்தது. இந்த பயன்மிக்க சமர்ப்பணங்கள் http://www.slcert.gov.lk/sat.htm என்ற இணையத்தளத்தில் கிடைக்கின்றது. அந்த சமர்ப்பணங்களை ஆராய்ந்துபார்க்கும்படி அரசாங்க நிறுவனங்களுக்குப் பரிந்துரை செய்யப்படுகின்றது. அத்துடன் வேறு விபரங்கள் தேவைப்பட்டால் Sri Lanka CERT|CC ஐ தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
  • ICTA வினால் தொகுக்கப்பட்ட தகவல் பாதுகாப்பு சரிபார்க்கும் பட்டியலுடன் (Information Security checklist) உங்களடைய இணையத்தள விருத்தியாளர் அல்லது இணையத்தளத்தைப் பாராமரிக்கின்ற பொறுப்பை வகிக்கின்ற தரப்பு இணங்கியொழுகுவதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். மேலும் இணங்கியொழுகும் சரிபார்த்தல் 6 மாதங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படுகின்றது. http://www.icta.lk/attachments/254_Web_security_checklist%20v1.0.pdf
  • ICTA, Sri Lanka CERT|CC மற்றும் Sri Lanka Standard Institute (SLSI) கூட்டாக இணைந்து அடுத்த 2 வருடங்களில் அனைத்து அரசாங்க நிறுவனங்களுக்காகவும் தகவல் பாதுகாப்பு முகாமைத்துவ முறைமைகள் சான்றிதழ் (ISMS)வழங்க செயலாற்றும். மேற்குறிப்பிட்ட சான்றிதழ் நடைமுறைக்காக உங்கள் நிறுவனத்தைப் பட்டியல்படுத்திக்கொள்க.
 
Submit to FacebookSubmit to Google BookmarksSubmit to TwitterSubmit to LinkedIn