நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு இலங்கை அரசாங்கம்

அரசாங்கம்

இலங்கை சனநாயக சோசலிச குடியரசு சுதந்திரமான, விடுதலையான, இறைமையுள்ள நாடாகும். இது 1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட சனாதிபதி முறைமையினால் ஆளப்படுகிறது. சனாதிபதி ஆறுவருட காலத்திற்குப் பதவி வகிப்பதற்கு பொதுமக்களால் தெரிவு செய்யப்பட்ட அரச தலைவராகவும் அரசாங்கத்தின் தலைவராகவும் இருக்கின்றார். அரசின் நிறைவேற்றதிகாரம் சனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்துக்கும் அபிவிருத்திக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்களுக்குப் பொறுப்பாக இருக்கின்ற பல அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை அவருக்கு உதவுகிறது. மக்களால் விகிதாசார அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 225 பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றத்திற்கு சட்டவாக்க அதிகாரம் உண்டு. மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபைகள் மாகாண மட்டத்தில் ஆட்சி செய்யும் நிறுவனங்களாக இருக்கின்றன. அத்துடன் உள்ளூராட்சி மன்றங்கள், கிராமிய பிரதேசங்களின் மற்றும் 'பிரதேச சபை' பிரதேசங்களின் நிர்வாகத்திற்கு பொறுப்பாக இருக்கின்றன. பிரசைகளின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படுகின்ற பல்வேறு விதமான சட்ட பிரச்சினைகளுக்கு தீர்ப்பு வழங்குவதற்கும் பிணக்குகளைத் தீர்த்து வைப்பதற்கும் சிறந்த முறையில் அமைக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்டவாக்கம் என்பவற்றிலிருந்து சுதந்திரமாக இயங்குகின்ற சிறந்த நீதிமன்ற முறைமை இருக்கின்றது.

 
Submit to FacebookSubmit to Google BookmarksSubmit to TwitterSubmit to LinkedIn