நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு இலங்கை இலங்கை பற்றி

இலங்கை பற்றிய தகவல்கள்

அடிப்படை தரவு

 

நாட்டின் பெயர் : நீண்ட பெயர் : இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
ஏற்றுக்கொள்ளப்பட்ட குறுகிய பெயர் : இலங்கை
முந்திய பெயர் : இலங்கை
அளவு : பரப்பளவு : 65,610 சதுர கிலோ மீற்றர்
நீளம் : 445 கிலோ மீற்றர்
அகலம் : 225 கிலோ மீற்றர்
தலைநகரம் : ஸ்ரீ ஜயவர்தனபுர
வணிகத் தலைநகரம் : கொழும்பு
அரசாங்கம் : இலங்கையானது ( 2004 மதிப்பீட்டின்படி ) 19.5 மில்லியன் மக்களைக் கொண்ட சுதந்திரமும் தன்னாதிக்கமும் உடைய நாடாகும். விகிதாசார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் சர்வசன வாக்குரிமையின் மூலமாகத் தெரிவுசெய்யப்படுகின்ற பாராளுமன்றத்தினால் சட்டவாக்க அதிகாரம் பிரயோகிக்கப்படுகின்றது. பொதுமக்களாலேயே தெரிவு செய்யப்படுகின்ற ஜனாதிபதி பாதுகாப்பினை உள்ளிட்ட நிறைவேற்று அதிகாரத்தை அமுலாக்கி வருகின்றார். பலகட்சிமுறை நிலவுகின்ற இலங்கை மக்கள் ஆறு வருடங்களுக்கு ஒருதடவை புதிய அரசாங்கமொன்றைத் தெரிவு செய்வதற்காக வாக்களிக்கின்றனர்.
சனத்தொகை : 20.3 மில்லியன் ஆகும்
சனத்தொகை அடர்த்தி : சதுர கிலோ மீற்றருக்கு 296 பேர்
ஆயுள் எதிர்பார்ப்பு : பெண்கள் 76.4 ஆண்கள் 71.7 (2001 மதிப்பீட்டின் பிரகாரம்)
எழுத்தறிவு விகிதம் : 92.7 சதவீதம் (2003 மதிப்பீட்டின் பிரகாரம்)
மொழிகள் : சிங்களம், தமிழ் ஆகிய மொழிகள் இலங்கையில் பரவலாகப் பாவனையில் உள்ளது.
இனப்பிரிவுக் கலப்பு : சிங்களவர் 74.9%. தமிழர் 15.4%. முஸ்லிம்கள் 9.2%, பறங்கியரும். (ஒல்லாந்த மற்றும் போர்த்துக்கேய வழித்தோன்றல்கள்) பிற இனத்தவர்களும் 0.5% . (2012 மதிப்பீட்டின் பிரகாரம்)
மதம் : பௌத்தம் 70.19 %, இந்து 12.61%, கிறிஸ்தவம் 7.45%, இஸ்லாம் 9.71%
காலநிலை : தாழ்நிலப் பிரதேசங்கள் - வெப்ப வலயத்தைச் சேர்ந்தவை சராசரி வெப்பநிலை 27 பாகை செல்சியஸ் ஆகும். மத்திய மலைநாடு –மிகவும் குளிரானது. வெப்பநிலை 14 பாகை செல்சியஸ் வரை வீழ்ச்சியடையும். தென்மேல் பருவக்காற்று மழை மே முதல் யூலை வரை மேற்கு, தெற்கு மற்றும் மத்திய பிரதேசங்களுக்கு கிடைக்கும். வட கீழ் பருவக்காற்று மழை டிசெம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வடக்கு – கிழக்குப் பிரதேசங்களுக்கு கிடைக்கும். உல்லாசப் பயணிகளின் மனதைக் கவரக்கூடிய காலநிலை ஆண்டுபூராவிலும் நிலவுகின்றமை இலங்கையின் தனித்துவமான பண்பாகும்.
வருடாந்த தலா வருமானம் GNP : 2580 அமெரிக்க டொலர்கள் (2011 மதிப்பீட்டின் படி)
கைத்தொழில்கள் : Pஇறப்பர், தேயிலை, தெங்கு மற்றும் வேறு விவசாயப் பொருட்களைப் பதனிடல், ஆடை தயாரிப்பு, சீமெந்து, பெற்றோலிய சுத்திகரிப்பு, துணிமணிகள் மற்றும் புகையிலை.
விவசாய உற்பத்திகள் : அரிசி, கரும்பு, தானிய வகைகள், அவரையினத் தாவரங்கள், எண்ணெய் தயாரிக்கும் விதையினங்கள், கிழங்கு வகைகள், பலசரக்கு சாமான்கள், தேயிலை, இறப்பர், தேங்காய், பால், முட்டை, தோல், இறைச்சி.
புழக்கத்திலுள்ள பணம் : தசம பண முறை கடைப்பிடிக்கப்படகின்ற இலங்கையில் ரூபா 2,10,20,50,100,200,500,1000 மற்றும் 2000 பெறுமதியான தாள்கள் பாவிக்கப்படுகின்றன. 1,2,5,10,25,50 சத நாணயக் குற்றிகளும் ரூபா 1,2,5,10 பெறுமதியான நாணயக் குற்றிகளும் உள்ளன. சர்வதேச ரீதியாக பணத்தின் பெறுமதி கணிப்பிடப்படுகையில் டொலர் அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றது.
விசா அனுமதிப் பத்திரம் : உங்கள் நாட்டின் இலங்கைத் தூதரகத்திடமிருந்து, கொன்சியுலேற் அலுவலகத்திடமிருந்து, சுற்றுலாத்துறை அலுவலகத்திடமிருந்து அல்லது உங்ளின் உல்லாசப் பயணத்துறை முகவரிடம் விசாரிக்கவும்.
வாரத்தின் வேலை நாட்கள் : திங்கள் முதல் வெள்ளி வரையான ஐந்து நாட்களைக் கொண்ட வாரமே இலங்கையில் நடைமுறையில் உள்ளது.
அலுவலக நேரங்கள் : அரசாங்க அலுவலகங்கள் திங்கள் முதல் வெள்ளி வரை மு.ப. 8.30 முதல் பி.ப. 4.15 வரை திறந்திருக்கும்.
வங்கிகள் : திங்கள் முதல் சனி வரை மு.ப. 9.00 மணி முதல் பி.ப.1.00 மணி வரை அல்லது பி.ப. 3.00 மணி வரை திறந்திருக்கும்.
அஞ்சல் அலுவலகங்கள் : திங்கள் முதல் வெள்ளி வரை மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரையும் சனிக்கிழமைகளில் மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 1.00 மணி வரையும் திறந்திருக்கும். மத்திய தபால் பரிவர்த்தனை நிலையம் கொழும்பு 10, டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ளது. 24 மணிநேரமும் திறந்திருக்கும் ( தொலை பேசி – 2326203 )
இடஅமைவு : இந்து சமுத்திரத்தில் மத்திய கோட்டிலிருந்து 880 கிலோ மீற்றர் வடக்கில் இந்தியாவின் தென்கிழக்கு கரையோரத்திற்குத் தொலைவில் அமைந்துள்ள தீவாகும். அது மத்திய கோட்டிற்கு வடக்கே 5° 55' மற்றும் 9° 55' இடையேயும், கிழக்கு நிலநடுக்கக் கோட்டிற்கு 79° 42' மற்றும் 81° 52' இடையேயும் அமைந்துள்ளது.
சிறப்பம்சம் : அழகான வறள் வலய கடற்கரை, கண்கவர் விருட்சங்கள், புராதன தாதுகோபுரங்கள் போன்றன காணப்படுவதுடன் அனைவரும் விரும்பத்தக்க அழகான கண்கவர் காட்சிகளால் நிரம்பி வடிகின்றன. நாட்டிலே புவிசரித்திரவியல் மாற்றங்கள், மத்திய மலை நாட்டிலிருந்து ஓரளவு தெற்கே, 2500 மீட்டரை விடவும் உயரமான பல மலைத் தொடர்கள், அதைச் சுற்றியுள்ள சமவெளிகள் என்பவற்றையும் கொண்டுள்ளது. தென்னை மரங்கள் நிரம்பிய கடற்கரையால் சூழ்ந்து காணப்படுகின்ற இந்தத் தீவிலே கடல் வெப்ப நிலையானது 27° பாகை செல்சியஸ்ஸை விடவும் குறைவது சில சமயங்களிலாகும்.
Last Updated on Monday, 24 June 2013 07:54
 

வரலாறு

புதிய சீலா யுகத்தில்கூட இலங்கையில் உணவுகளை சேகரிப்போர், நெற்பயிர் செய்கை விவசாயிகள் இருந்தமைக்கான ஆதாரங்கள் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தக் காலம் பற்றி தெரிந்த விடயங்கள் மிகவும் குறுகியவையாகும். எமது எழுத்து மூலமான வரலாறானது, இந்தியாவில் இருந்து வந்த ஆரியர்களின் வருகையுடனேயே ஆரம்பமாகின்றது. ஆரியர்கள் இரும்பு பாவனை, வளர்ச்சியடைந்த விவசாயம் மற்றும் நீர்ப்பாசன முறைமைகளை அறிமுகப்படுத்தினர். அவர்கள் நாட்டை நிர்வகிக்கும் அரசாங்க முறைமையையும் அறிமுகம் செய்தனர். ஆரிய குடியிருப்புக்களில் அநுராதபுர பண்டுகாப்பய மன்னனின் ஆட்சியின் கீழ் பலமிக்க இராசதானியொன்று உருவானது. மரபு வழியான வரலாற்றின் பிரகாரம் அநுராதபுரத்தின் ஸ்தாபகராகவும் அவரே கருதப்படுகிறார்.

பண்டுகாப்பய மன்னனின் வம்ச வழியாக வரும் ஒருவரான தேவநம்பியதிஸ்ஸ மன்னனின் ஆட்சிக் காலத்தில் கி.மு. 247 இல் இந்நாட்டிற்கு பௌத்த தர்மமானது. இந்தியாவின் அசோக்க சக்கரவர்த்தியின் மகனான மஹிந்த தேரரினால் கொண்டுவரப்பட்டது. பௌத்த தர்மமானது இந்நாட்டின் கலாசார சிறப்புத் தன்மைக்கு வழிகாட்டியமையால் இலங்கை வரலாற்றிலே இந்நிகழ்வானது மிக முக்கியத்துவமிக்க ஒன்றாக கருதப்படுகின்றது. இவ்வாறானதொரு புதிய கலாசாரம் தோற்றம் பெற்றமையால் இலங்கையானது செழிப்புமிக்க ஒரு நாடாக மாறியது.

கி.மு. 2 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கையின் வடக்குப் பிரதேசத்தின் பாரியதொரு பகுதி தென் இந்திய ஆக்கிரமிப்பாளன் ஒருவரின் கட்டுப்பாட்டிற்கு உள்ளானது. கிறிஸ்தவ ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது முதல் கி.பி. 4 ஆம் நூற்றாண்டு வரையில் இலங்கையை ஆட்சிசெய்தவர்ளாக, நீர்ப்பாசனத் துறையில் கவனம் செலுத்தி பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டு தொடர்ச்சியாக வம்ச வழியாக வந்தவர்களான லம்பகர்ன எனும் வம்சாவளியினரைக் குறிப்பிடலாம். இந்த வம்சத்தின் சிரேஷ்ட மன்னரான (கி.பி. 3 ஆம் நூற்றாண்டிலே) மஹாசேன மன்னன், பாரிய அளவிலான வாவிகளாக காணப்படுகின்ற நீர்பாசன நீர்த்தேக்கங்களை நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பித்தார். குளங்களை கட்டுவித்த மற்றுமொரு சிரேஷ்ட மன்னராக தாதுசேன மன்னரைக் குறிப்பிடலாம். இந்த மன்னரை கொலை செய்த அவரது மகன் காசியப்பன் சீகிரியாவை தமது அரச நகரமாக மாற்றியமைத்துக்கொண்டு சீகிரியா கல்லின் உச்சியினை தமது ஆட்சியின் தலைநகரமாக மாற்றிக் கொண்டான்.

தென் இந்திய ஆக்கிரமிப்புக்களின் பிரதிபலனாக அநுராதபுர இராசதானியானது கி.பி. 10 ஆம் நூற்றாண்டளவில் தோல்விகண்டது. 1 ஆவது விஜயபாகு மன்னன் ஆக்கிரமிப்பாளர்களை விரட்டியடித்து கி.பி. 11 ஆவது நூற்றாண்டிலே பொலன்னறுவையை தமது தலைநகரமாக மாற்றினான். பொலன்னறுவையை ஆட்சி செய்த ஏனைய சிரேஷ்ட மன்னர்களாக மஹா பராக்கிரமபாகு மற்றும் நிஸ்ஸங்கமல்ல எனும் மன்னர்கள் காணப்பட்டதுடன், அவர்கள் கட்டடக் கலை துறையில் பெறுமதிமிக்க பல கட்டடங்களை நிர்மாணித்து நகரத்தை அலங்கரித்தனர்.

எதிரிகளின் ஆக்கிரமிப்புக்கள் அடிக்கடி இடம்பெற்று வந்தமையால் தலைநகரமானது இடத்திற்கிடம் மாற்றப்பட்டு, 1505 ஆம் ஆண்டிலே போர்த்துக்கேயர்கள் ஆக்கிரமிக்கும்போது மேற்குப் பிரதேசத்தின் சமவெளியான கோட்டையானது பிரதான நகரமாக காணப்பட்டது. போர்த்துக்கேயர் பலசரக்கு வியாபார நோக்கத்திற்காகவே இங்கு வந்தனர். எனினும் கடற்கரை பிரசேங்களை தமது கட்டுப்பாட்டின்கீழ் 1956 ஆம் ஆண்டுவரையில் வைத்திருந்ததுடன், அதன் பின்னர் அதனை ஆக்கிரமித்த ஒல்லாந்தர்களும் இதனையே பின்பற்றினர். ஒல்லாந்தர்களின் ஆட்சியானது, 1656 முதல் 1796 வரையில் காணப்பட்டது. 1796 ஆம் ஆண்டிலே அவர்களை விரட்டியடித்து பிரித்தானியர்கள் ஆட்சியினை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். இந்தக் காலத்தில் மலைநாட்டு இராசதானியானது கண்டியினைத் தலைநகரமாகக் கொண்டு இயங்கியது. நாட்டின் ஏனைய பிரதேசங்களை நிருவகித்த அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் திரும்பத்திரும்ப தாக்கியபோதிலும் அவர்கள் தமது சுதந்திரத்தை பாதுகாத்து வந்தனர். 1815 ஆம் ஆண்டிலே கண்டி இராசதானியானது பிரித்தானியர்களின் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவரப்பட்டதுடன், இதனூடாக அவர்கள் முழு நாட்டையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். நவீன தொடர்பாடல் முறைமைகள், மேலைத்தேய மருத்துவ முறைகள், ஆங்கிலக் கல்வி உட்பட பெருந்தோட்டக் கைத்தொழில் (முதன்முதலில் கோப்பி, அதன் பின்னர் தேயிலை, அதன் பின்னர் இறப்பர் மற்றும் தெங்கு) ஆகிய இவைகள் பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் வளர்ச்சியடைந்தது. அமைதியான அரசியலமைப்பு பரிணாமத்தின் பின்னர் இலங்கையானது தமது சுதந்திரத்தை 1948 ஆம் ஆண்டிலே மீளப் பெற்றுக்கொண்டது. தற்போது இறைமையுள்ள குடியரசு ஒன்றான இலங்கையானது பொதுநலவாய நாடுகளின் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை என்பவற்றில் அங்கத்துவம் வகிக்கின்றது.

Last Updated on Monday, 24 June 2013 07:54
 

பொருளாதாரம்

இலங்கையானது பிரதானமாக விவசாய நாடொன்றாகும். பிரதான பயிரான அரிசியினால் இலங்கையானது தன்னிறைவடைந்து காணப்படுகின்றது. தேயிலை, இறப்பர், தெங்கு என்பனவும் முக்கியமான விவசாயப் பயிர்களாகக் காணப்படுவதுடன், அதிலே தேயிலையானது அந்நிய செலாவணியைப் பெற்றுத்தரும் முக்கிய பயிராகவும் விளங்குகின்றது. இவற்றைவிட ஏனைய முக்கிய பயிர்களாக கொக்கோ, கறுவா, ஏலம், சாதிக்காய், மிளகு, கராம்பு என்பன பலசரக்குகளாகும். சமரேகை மற்றும் நடுநிலையான காலநிலை வலயங்களுக்குத் தனித்துவமிக்க பழவகைகள் மற்றும் மரக்கறி வகைகள் என்பன இலங்கையிலும் சிறப்பாக வளர்கின்றன. இலங்கையர்களின் ஊடாக கிடைக்கப்பெற்ற அந்நியச் செலாவணியின் பெறுமதியானது அதிக அளவாகும்.

கடந்த மூன்று தசாப்பதங்களினுள் சுற்றுலாக் கைத்தொழிலும் முக்கியமானதொரு கைத்தொழிலாக வளர்ச்சிகண்டுள்ளது. உற்பத்திக் கைத்தொழில்களிலும் துரித முன்னேற்றமொன்று ஏற்பட்டுள்ளதுடன், அதனூடாக மசகு எண்ணெய் உற்பத்தி, தோல் பொருட்கள், தைத்த ஆடைகள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

 

 

 

 

 

 

 

Last Updated on Monday, 24 June 2013 07:54
 

சனத்தொகை வீதம்

இலங்கையின் சனத்தொகையானது 18.5 மில்லியனாகும். அதில் பெரும்பான்மையானவர்கள் சிங்களவர்களாவர் (74%). ஏனைய இனத்தவர்களாக இலங்கை தமிழர்கள் (12.6%), இந்திய தமிழர்கள் (5.55%), மலேயர்கள் (போர்த்துக்கேயர், ஒல்லாந்தர்களின் மரபுவழி வந்தவர்கள்) பர்கர் 7.9% போன்றோர் காணப்படுகின்றனர்.

இலங்கையானது பல சமயத்தவர்கள் வாழும் ஒரு நாடாகக் காணப்படுகின்றபோதிலும் (69.3%) வீதத்தினர் பௌத்தர்களாவர். ஏனைய சமயத்தவர்களாக, இந்துக்கள் (15.5%) முஸ்லிம்கள் (7.6%) மற்றும் கிறிஸ்தவர்கள் (7.5%) போன்றோர் காணப்படுகின்றனர். 88.6% வீதமாகக் காணப்படுகின்ற இலங்கையின் எழுத்தறிவு வீதமானது ஆசியாவிலேயே காணப்படும் உயர் எழுத்தறிவு வீதமாகும்.

Last Updated on Monday, 24 June 2013 07:54
 

மொழி மற்றும் சமயம்

சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் என்பன அரசகரும மொழிகளாகும். இந்து, ஆரிய மொழிகளின் கலவையால் தோற்றம் பெற்ற சிங்கள மொழியே அதிகம் மக்கள் உபயோகிக்கும் மொழியாகும். இலங்கையில் வட கிழக்கு மக்களால் பெரும்பான்மையாக பேசப்படும் தமிழ் மொழி ஒரு திராவிட மொழியாகும். ஆங்கில மொழியும் அதிகம் பயன்படுத்தப்படுவதுடன், அதிகமானோருக்கு அதனை விளங்கிக்கொள்ளவும் முடியும்.

இடங்களைக் குறிக்கும் பெயர் பலகைகள், பஸ் வண்டிகள், புகையிரதங்கள் போன்றவற்றின் சமிக்ஞை பலகைகள் என்பன பொதுவாக மும்மொழிகளிலும் காணப்படுகின்றன. இலங்கை என்பது மதச் சுதந்திரம் காணப்படும் தாம் விரும்பிய மதத்தினைப் பின்பற்றுவதற்கும் வழிபடுவதற்குமான சுதந்திரம் காணப்படும் ஒரு நாடாகும். எந்தப் பிரதேசத்திற்குச் சென்றாலும் அந்தந்த மதங்களுக்குத் தனித்துவமிக்க கட்டடக் கலை வடிவமைப்புக்களைக் கொண்ட பௌத்த விஹாரைகள் தாதுகோப்பாக்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், முஸ்லிம் பள்ளிவாசல்கள் என்பவற்றைக் காணக்கூடியதாக உள்ளன. மதவழிபாட்டுத் தலங்களுக்குள் நுழையும்போது அவற்றிற்கு அவமரியாதை ஏற்படாதவாறு ஆடை அணிகலன்களை அணிந்து செல்வது கடமையாகும்.

உலக உரிமைக்கு இலங்கையின் பங்களிப்பு: பௌத்த தர்மம்: விடுதலையை நோக்கி பயணித்த புத்தரின் வழி

இலங்கையின் பிரதான மதம் பௌத்த சமயமாகும். அது இந்நாட்டிலே உத்தியோகபூர்வமாக கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலே தேவநம்பியதிஸ்ஸ மன்னனின் ஆட்சிக் காலத்தில் தோற்றம் பெற்றுள்ளது. அது இந்தியாவின் அசோக சக்கரவர்த்தியின் மகனான மஹிந்த தேரரினால் இந்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அதனை இந்நாட்டிற்கு கொண்டுவந்த உடனேயே புதிய தர்மத்தை நாட்டு மக்கள் துரிதமாக பின்பற்றி வந்தமையால் ஒருசில மாதங்களினுள் நாடு முழுவதிலும் பௌத்த தர்மம் பரவியது. இலங்கையானது பௌத்த தர்மத்தின் வளர்ச்சிக்கு செழிப்பான பிரதேசமாக மாறியது.

பௌத்த தர்மம் எனும்போது கி.மு. 6 ஆவது நூற்றாண்டிலே பாரத நாட்டு இளவரசராக பிறந்து பின்னர் புத்தர் நிலையை அடைந்த, கௌதம புத்த பெருமான் அவர்களினால் மனித வர்க்கத்திற்கு போதித்த உளவியல் மற்றும் தத்துவ ரீதியான அறவழியினைக் கொண்ட செயல்முறை ரீதியான வாழ்க்கை முறையொன்றாகும். அன்னார் மத்திய பாரத தேசத்தில் கபிலமுனி இராசதானியின் பிராந்திய ஆட்சியாளர் ஒருவரான சுத்தோதனனின் மகனாக கி.மு. 623 ஆம் ஆண்டு மே மாதம் பூரண பௌர்ணமி தினமன்று பிறந்தார். அன்னாரது தர்மமானது இன்று உலக சனத்தொகையில் சுமார் நான்கில் ஒரு பகுதியினர் மத்தியில் செல்வாக்கு செலுத்தக் கூடிய மற்றும் வழிகாட்டக் கூடிய சர்வதேச சமயமொன்றாக மாறியுள்ளது.

சித்தார்த்த குமாரர் இல்லற வாழ்வில் இருபத்தி ஒன்பது வருடங்களை கழித்துள்ளார். அதில் இறுதி பதின்மூன்று ஆண்டுகள் யஷோதரா தேவியுடன் கழித்த விவாக வாழ்க்கையும் அடங்கும். அனைத்து சுகபோகங்களையும் கொண்ட இளவரசர் ஒருவராக பிறந்து, வீட்டிலே சிறந்ததொரு வாழ்க்கையினை வாழ்ந்து வந்தார். அவ்வாறாயினும், இளம் பராயத்திலிருந்தே அன்னார் மனிதர்களின் பிரச்சினைகள் பற்றி மனம்வருந்தி வந்தார். அதனால் சுகபோக அரச வளங்கள் அவருக்கு திருப்தியளிக்கவில்லை. அவ்வாறானதொரு மகிழ்ச்சிகரமான வாழ்விற்கு அவர் ஆசைப்படவில்லை. சுகபோகம் என்பது தற்காலிகமானது, நிரந்தரமற்றது என்பதே அன்னாரின் இறுதி பகுப்பாய்வாக அமைந்தது. இதன் கருத்து வாழ்க்கையென்பது துக்கமிக்க ஒன்று என்பதாகும். பலர் இன்பமாக கருதும் அனைத்தும் மாயமானவையே. மகிழ்ச்சி மற்றும் சௌபாக்கியம் என்பவற்றிற்கிடையே மனித வாழ்க்கையில் உரிமை கொண்டுள்ள, உலகம் முழுவதிலும் பரவிக் காணப்படுகின்ற துக்கத்தினை அவர் கண்கூடாகக் கண்டார்.

இந்த உலகிலே மனிதர்கள் இன்பத்தை அடைவதற்கு எவ்வளவு முயற்சித்த போதிலும்கூட எல்லா உயிரினங்களிடமும் துக்கமானது குடிகொண்டுள்ளது. லௌகீக சுகபோகங்களை தேடிச் செல்வதனை வெறுத்த அன்னார், மிகவும் எளிமையான துறவி உடையணிந்து தனிமையாக காசு எதுவுமின்றி வீட்டிலிருந்து வெளியேறி வீடுகள் எதுவுமே இல்லாத இடம் நோக்கிச் சென்று, தம்மால் அடைந்துகொள்ள முடியுமென தாம் எண்ணிய மகிழ்ச்சி மற்றும் அமைதி என்பவற்றை தேடிச் சென்றார்.

ஆரம்பத்திலே அன்னார் அக்காலத்தில் இருந்த மாண்புமிக்க ஆசான்களிடம் சென்றார். தாம் எதிர்பார்த்தவற்றை அவர்களினால் நிறைவேற்ற முடியவில்லை. அதனை சுய முயற்சியின் மூலம் பெற்றுக்கொள்ள அவர் திடசங்கற்பம் பூண்டார். அதன் பின்னர் நான்கு வருடங்கள் அதற்காக அரும் பாடுபட்டார். உடம்பினை துன்பப்படுத்துவதன் மூலம் அதனை அடைந்துகொள்ள முடியாது என்பது அதன்போது அவருக்கு தெளிவானது, அவ்வாறாயினும், கண்டுபிடிப்புக்கள் மூலம் தாம் ஆத்மீகத்தின் பக்கம் நெருங்கி இறுதியிலே அவர் தமது எதிர்பார்ப்பினை வெற்றிகொண்டார். இந்நிகழ்வு கி.மு. 588 ஆம் ஆண்டு வெசாக் பூரண பௌர்ணமி தினத்தன்று இந்தியாவின் புத்தகயாவிலுள்ள ஸ்ரீ மஹாபோதியின் அடியில் நிகழ்ந்தது.

(பௌத்த நூல்கள் வெளியீட்டுச் சங்கத்தின் உதவிப் பணிப்பாளர்)

Last Updated on Monday, 24 June 2013 07:54
 

காலநிலை மற்றும் பயிரிடும் காலங்கள்

மலைகளற்ற தாழ்நிலத்தைக் கொண்ட பிரதேசங்களில் பெறும்பாலும் வரண்ட பிரதேச காலநிலை நிலவுகின்றது. கொழும்பு பிரதேசத்தில் சராசரி வெப்பநிலை 27° பாகை செல்சியஸ் ஆக காணப்படுவதுடன், சுமார் 2000 மீட்டர் வரையிலான உயர் நிலங்களில் இந்நிலையானது 16° பாகை செல்சியஸ் வரையில் குறைந்து காணப்படுகின்றது. பருவக்காற்று மழைக் காலங்களில் உட்பட நாளாந்தம் காணக்கூடிய பொதுவானதொரு தன்மையாக பிரகாசமிக்க சூரிய வெளிச்சம் காணப்படுகின்றது. காலநிலை ரீதியாக விவசாயத்திற்கு பொருத்தமற்ற அகாலபருவங்கள் இலங்கையில் காணப்படுவதில்லை. மே முதல் யூலை வரையிலான காலப்பகுதியினுள் தென்மேல் பருவக்காற்று மழை வீழ்ச்சியானது நாட்டின் மேற்கு, தெற்கு மற்றும் மத்திய மலைநாட்டுப் பிரதேசங்களுக்குக் கிடைக்கப் பெறுவதுடன், திசெம்பர், சனவரி மாதங்களில் வடகிழக்கு பருவக்காற்று மழைவீழ்ச்சியானது வடக்கு, கிழக்கு பிரதேசங்களிற்கு கிடைக்கப்பெருகின்றன.

Last Updated on Monday, 24 June 2013 07:54
 

இலங்கையின் தேசிய சின்னங்கள்

இலங்கை தேசிய கீதம்

இலங்கைக்கு 1948 ல் சுதந்திரம் வழங்கப்பட்டதற்கு பிறகு, ஒரு தேசிய கீதத்திற்கான தேவை எழுந்தது. ஒரு போட்டியில் முடிவாக, சிங்கள மொழியினால் எழுதப்பட்ட ஆனந்த சமரகோனின் பங்களிப்பு, புதிய கீதமாக தேரிவு செய்யப்பட்டது. தமிழ் பாடல் வரிகளின் பொருளானது, சிங்கள பாடல் வரிகளின் அதே பொருளைக் கொண்டுள்ளது. அது முதன் முதலாக 1952 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இடம்பெற்ற நான்காவது ஆண்டு சுதந்திர வைபவத்தில் நிகழ்த்தப்பட்டது.

தேசிய கீதத்தின் தமிழ் பாடல் வரிகள்

 

 

 

 

ஸ்ரீ லங்கா தாயே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே

நல்லெழில் பொலி சீரணி
நலங்கள் யாவும் நிறை வான்மணி லங்கா
ஞாலம் புகழ் வள வயல் நதி மலை மலர்
நறுஞ்சோலை கொள் லங்கா
நமதுறு புகலிடம் என ஒளிர்வாய்
நமதுதி ஏல் தாயே
நமதலை நினதடி மேல் வைத்தோமே
நமதுயிரே தாயே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே

நமதாரருள் ஆனாய்
நவை தவிர் உணர்வானாய்
நமதோர் வலியானாய்
நவில் சுதந்திரம் ஆனாய்
நமதிளமையை நாட்டே
நகு மடி தனையோட்டே
அமைவுறும் அறிவுடனே
அடல்செறி துணிவருளே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே

நமதோர் ஒளி வளமே
நறிய மலர் என நிலவும் தாயே
யாமெல்லாம் ஒரு கருணை அனைபயந்த
எழில்கொள் சேய்கள் எனவே
இயலுறு பிளவுகள் தமை அறவே
இழிவென நீக்கிடுவோம்
ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி
நமோ நமோ தாயே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே

இலங்கை தேசிய கொடி

The National Flag of Sri Lanka represents the country and her heritage as rallying device that integrates the minorities with the majority race.

Sri Lanka National Flag is an improvisation of the civil standard of the last king of Sri Lanka, Sri Wickrama Rajasingha.

The civil standard had a passant royal lion with a sword in it's right fore paw at the center, and a bo-leaf on each of the four corners on a plain border.

When Sri Lanka gained her independence from Great Britain on February 04, 1948, it was the lion flag of the last king of Sri Lanka was hoisted once again.

The first Prime Minister of independent Sri Lanka, D.S.Senanayake, appointed a committee to advice the government on the design of a new national flag. The design approved by the committee in February 1950 retained the symbol of the lion with the sword and the bo-leaves from the civil standard of the last king of Sri Lanka, with the inclusion of two vertical stripes green and orange in color.

The significance of each symbol of the national flag is as follows:

 • The lion in the flag represents the Sinhala race.
 • The sword of the lion represents the sovereignty of the country.
 • Curly hair on the lion's head indicates religious observance, wisdom and meditation.
 • The beard denotes purity of words.
 • The handle of the sword highlights the elements of water, fire, air and earth.
 • The nose indicates intelligence.
 • The two front paws purport to purity in handling wealth.
 • The vertical stripe of orange represent the minority Tamil race and the green vertical stripe the minority Muslim race.
 • The four virtues of kindness: KINDNESS, FRIENDLINESS, HAPPINESS, EQUANIMITY are also represented in the flag.
 • The border round the flag, which is yellow in color, represents other minor races.
 • The bo-leaves at the four corners of the flag represent Buddhism and it's influence on the nation. They also stand for the four virtues - Kindness, Friendliness, Happiness and Equanimity.
 • The maroon colored portion of the flag manifests the other minor religions.

The national flag was hoisted for the first time on March 3, 1950.

இலங்கை தேசிய மரம்

“Mesua Nagassarium” எனும் தாவரவியல் பெயரால் அழைக்கப்படுகின்ற நாக மரம் 1986 பெப்ரவரி 26 ஆம் திகதி இலங்கையின் தேசிய விருட்ஷமாக பிரகடனம் செய்யப்பட்டது.

தேசிய விருட்ஷமாக நாக மரம் தெரிவு செய்யப்பட ஒரு சில ஏதுக்கள் காரணமாக அமைந்தன.

 • இலங்கைக்கு மாத்திரம் ஓரிடஞ் சார்ந்த விருட்ஷமாக அமைதல்
 • தாவரத்தின் பயனுள்ள தன்மை
 • வரலாற்று மற்றும் கலாசார முக்கியத்துவம்
 • வெளித் தோற்றம்
 • விரிவான பரம்பல்
 • நிறமும் தன்மையும்
 • இலகுவாக வரையக்கூடியதாகவும் உருவப் படக் குறிப்பினை வரையக்கூடியதாகவும் அமைதல்

மலைக் கர்டுகளில் வளரும் இத்தாவரம் ஏறக்குறைய 30 மீற்றர் உயரம் வரை வளருவதோடு இலங்கையின் ஈர வலயத்திற்கு மாத்திரமே ஓரிடஞ் சார்ந்ததாக அமைந்துள்ளது. நாக மரத்தின் தளிர்கள் சிவப்பு நிறம் உடையதாக காணப்படுவதோடு முதிர்ச்சி அடைந்த இலைகள் பச்சை நிறம் உடையவை. நாக மரத்தின் குற்றி வைரம் மிக்கது, நீண்டகாலம் நிலைத்திருக்கக் கூடியது. எனவே நீண்ட காலமாக பாலங்களை அமைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. சமய ரீதியான பெறுமதியை கொண்டதாக இருப்பதால் நிகழ்காலத்தில் வெட்டுமரத்திற்காக பயன்படுத்தப்படுவதில்லை. நாக மரத்தின் பூக்கள் ஆயுர்வேத மருந்துகள், வாசனைத் திரவியங்கள் மற்றும் சவர்க்காரம் தயாரித்தல் ஆகியவற்றுக்காக பயன்படுத்துப்படுகின்றன.

புத்தபிரானின் வரலாற்று சிறப்பு மிக்க இலங்கைத் திருவருகையின் போது மஹியங்கணையிலுள்ள நாக மரச் சோலைக்கு வருகை தந்ததாக கூறப்படுகின்றது. மைத்திரி புத்தர் நாக மரத்தின் அடியில் புத்தர் நிலையை அடைவதாக ஒரு சிலர் நம்புகிறார்கள்.

இலங்கையின் தேசிய மலர்

“Nympheae Stellata” எனும் தாவரவியல் பெயர்கொண்டு அழைக்கப்படுகின்ற நீலோற்பலம் இலங்கையின் தேசிய மலராக 1986 பெப்ருவரி 26 ஆந் திகதி பிரகடனஞ் செய்யப்பட்டது.

 

 

 

 

இலங்கை தேசிய பறவை

Sri Lanka Jungle Fowl – Very colorful ground bird, endemic to Sri Lanka is the national bird of Sri Lanka. Distributed commonly in Sri Lanka's jungle and dense scrub through out. Roosts high in trees at nights. Flies up to tree branches when threatened. Nests in hidden, scraped place on the ground or on a pile of vegetation just off the ground. Sinharaja is a very good site to watch Sri Lanka Jungle Fowl.

 

Last Updated on Monday, 24 June 2013 07:54
 

 
Submit to FacebookSubmit to Google BookmarksSubmit to TwitterSubmit to LinkedIn