'இன, மத, மொழி, சாதி வேற்றுமைகள் இல்லாமல் இலங்கையர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதுதான் அனைத்து இலங்கையர்களின் விருப்பமாகும். ஆனால் சுதந்திரமடைந்து 65 ஆண்டுகளின் பின்னரும்கூட இலங்கை தேசம் அதை அடையத் தவறிவிட்டது' ஜனாதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். இப்பொழுது மக்களின் மனோபாவங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரே தேசத்தை உருவாக்க அதை ஒவ்வொருவரும் ஆகக்கூடியளவில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.